உயர்தர நூல் வெளியீடும் மாணவர்கள் கௌரவிப்பும்.

அக்கரைப்பற்று Science College வெளியீட்டுப்பணியகத்தில் உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்,விவசாயவிஞ்ஞான செயன்முறைப்பயிற்சி மற்றும் தொழினுட்ப வழிகாட்டல் வளவாளர் எம்.ஜே.முஹம்மது றஜாய் எழுதிய “உயிர்முறைமைகள்” தொழினுட்பவியல் மாணவர்களுக்கான வழிகாட்டல் நூல் வெளியீடான Science College வெளியீட்டுப்பணிப்பாளர் ஏ.ஏ.றிபாஸ் ஏ.அஸீஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் த.நடேசமூர்த்தி, உதவி விசாயப் பணிப்பாளரும் பாலமுனை விவசாயக் கல்லூரி அதிபருமாகிய எம்.எப்.ஏ.சனீர் மற்றும் ஆசியமன்ற நிகழ்ச்சித்திட்ட நிபுணர் ஐ.எம்.றிஷாட் சரீப் ஆகியோரும் கலந்து கொண்டு கௌரவ, சிறப்பு நூற்பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் தொழினுட்பவியலுக்கான விஞ்ஞான நூல்வெளியீட்டின் மூலம் ஜனாதிபதிவிருது பெற்ற நூல் விமர்சகர் ந.மோகனகாந்தினால் நூல்விமர்சனமும் செய்யப்பட்டது. அத்துடன் 2015 இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிதொழினுட்பபாடத்துறையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான Science College மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உயர்தர தொழினுட்ப பாடத்துறையில் உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் மாணவர்களுக்கு தமிழ் மொழிமூலம் கிடைக்கப் பெறுகின்ற முதலாவது மாணவர் வழிகாட்டல் நூல் இது என்பது இந்நூல் வெளியீட்டின் போது இங்கு உரையாற்றிய அதிதி வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

Comments